.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, July 11, 2005

மனமே..கலக்கமேன் ?


"திறமையில்லா வல்லமை பயனில்லை. திறமைக்கு மன அமைதியும், நிதானமும் தேவை. மனம் கலக்கமோ, பதட்டமோ கொள்ளலாகாது. கடந்த காலத்தை நினைத்து, எதிர்காலத்தை கற்பனை செய்வதால் நம் மனம் பதட்டமடைகிறது. எனவே கடந்த காலத்தை மறந்து, எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படாமல் இருத்தல் வேண்டும். நிகழ்காலத்தைப் பொறுத்தவரை, சோதனையைத் திடமாய் எதிர்த்து, துணிவோடு,சிரசுக்கு மேல் இறைவன், நம்முள் மனம் இருக்கின்றனவென்று எண்ணிச் செயல்பட வேண்டும். தயக்கம் வேண்டாம். மன் ஓர்மையுடன் இறைவனிடம் சரணடைந்து கடமையைத் திறமையுடன் ஆற்றல் வேண்டும். சகலமும் நலமடையும்," என்கிறார் சுவாமி சின்மயானநதா.

சிந்தனை:நம் வாழ்வின் துயருக்கெல்லாம் காரணம் நமக்குள் இருக்கும் கோளாருதான். நம்முள் உள்ள கோளாருகளால் விளையும் துயருக்கெல்லாம் மாற்றம் நம்முள் தான் இருக்கிறது. நம்முள்ளே இருக்கும் கடவுளை உணர்வதுதான் துயர் நீக்க உதவும். நம்முள்ளேயே கடந்து உள்ளதாய், உள்ளிருந்து இயக்குவதாய் உள்ள கடவுள், நம் ஆளுமையிலேயே பதிந்து புதைந்துள்ளது. அது நம்மைக் கிளர்தெழச் செய்ய வல்லது; நம் ஆளுமையை மலரச்செய்வது.

கடவுள் சக்தி நம்முள்ளே இருப்பதை உணர்வது தான் கவலைகளிலிருந்து விடுபடுவதற்கு முதல்வழி!

1 Comments:

At Mon Sep 12, 12:40:00 PM 2005, Anonymous Anonymous said...

Really meaningful quotes.
It helped me alot.Thanks and warm regards. May your good work be blessed.

Thamaraial Sinnamunian
Ipda,Kedah

 

Post a Comment

<< Home