.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, August 13, 2005

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா




1.இவர் திரு முத்துச்செல்வன் த/பெ தண்ணீர்மலை. கோலாகங்சார் இவர் பூர்வீகம். சிறப்புக்குறிய விசயம்..இவர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். ஆசிரியர் துறையில் 12 ஆண்டு கால அனுபவம் உண்டு. இன்னொரு முக்கியமான தகவல் யாதெனில், 1994-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை அடியேன் இவருடன் இணைந்து ஜொகூர், கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியிருக்கின்றேன். அந்த இனிய நினைவுகளுடன் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டேன்.
திரு.த.முத்துச்செல்வன் கடந்த வியாழன் அன்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில்(USM) PJJ ( தொலை தூரக்கல்வி ) வழி மனித வளத்துறையில் ( Ilmu Kemanusiaan ) 4 ஆண்டு கல்வியை வெற்றிகரமாக முடித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். தம் தாயார் திருமதி சாலாட்சி நடேசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வேளையில், மறைந்த தம் தந்தையாரின் ஆசீர்வாதம் தான் தமக்கு உத்வேகம் அளித்தது என்றார். மேலும் தம் குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். அடுத்து தாம் முதுகலைப் படிப்பைத் தொடரப் போவதாக உறுதியுடன் கூறினார்.

பி.கு : பழகுவதற்கு இனியவரானவர் திரு.முத்துச்செல்வன்.இவர் மாணவர்களுக்குப் போதிக்கும் கலையை சற்றே எட்டி நின்று பார்த்து வியந்திருக்கின்றேன். மாணவர் நலன் கருதி போதனையை நடத்தியவர்; நல்லாசிரியர்.உழைப்பு நிச்சயம் ஒரு நாள் உயர்வைத் தரும் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!


2. இவர் வளர்ந்து வரும் ஆசிரியை. தற்போது தற்காலிக ஆசிரியையாகப் பணி புரிவதாகத் தெரிவித்தார் குமாரி மீனாட்சியம்மாள் த/பெ நடராஜன். இவர் கூலிம், கெடா மாநிலத்தைச் சார்ந்தவர். ஆரம்பக்கல்வியை லாடாங் பாகான் செனா, தமிழ்ப்பள்ளியில் கற்றார். எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியையாக வருவதே இவர் இலட்சியம் என்கிறார். இவரும் USM-இல் 4 ஆண்டு கல்வியாக Ilmu Kemanusiaan - மனிதவளத் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தமது வெற்றிக்கு முழு காரண கர்த்தாவாக இருப்பவர் தமது அம்மா தான் என்று கூறுகிறார். கடின உழைப்பு, சுய முயற்சி, அம்மாவின் ஆசி மற்றும் சமுதாயப் பற்றே தம்மை இவ்வளவு தூரம் உயர்த்தியுள்ளது என்று கூறுகிறார் குமாரி மீனாட்சியம்மாள்.

0 Comments:

Post a Comment

<< Home