.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, August 22, 2005

ஆழ்நிலைத் தியானம்


இன்று உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தியான முறைகள் கற்றுத் தரப்படுகின்றன. அவற்றுள் முக்கியமாக மூன்று வகைகளைக் குறிப்பிடலாம்:
1) மனதை ஒருமுகப் படுத்தும் ( Concentration ) தியானம்;
2) மனதைக் குவியச் செய்யும் ( Contemplation ) தியானம்;
3) மனதை ஆழ்நிலைப் படுத்தும் ( Transdental ) தியானம்.
இதில் ஆழ்நிலைத் தியானத்தைப் பொறுத்தவரை பழக்க வழக்கங்கள் எதையுமே மாற்றிக் கொள்ளத் தேவைவில்லை .( அடடே இதைத் தானோ இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தோம் என்கிறீர்களா...)எந்த வாழ்க்கை முறையில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை மாற்றாமல் இந்த தியானத்தைச் செய்யலாம்.

ஆழ்நிலைத் தியானம் செய்து, மனதை ஒருமுகப் படுத்தி, சிந்தை தெளிவு பெறுகிறது. அப்போது தன்னலம், அகங்காரம், பேராசை, காமம், கோபம் ஆகிய கீழான குணங்கள் நம்மைவிட்டு அகல்கின்றன. இவற்றிற்கு நேர் எதிரான நற்குணங்களைப் பழகும் போது மனதில் நிரந்தர அமைதி தோன்றுகிறது.

தியானம் செய்வதென்பது எங்கோ காட்டில் சென்று உட்கார்ந்து விடுவதல்ல. மனிதனை அழுத்தும் குறைபாடுகளை நீக்கிக்கொள்ள ஒரு மகானாலோ, முனிவராலோ தான் முடியும் என்பதல்ல. சாதாரண மனிதனாலும் முடியும். சாதாரண மனிதனுக்கு உள்ளேயும் அவனை ஓர் ஒப்பற்ற மேதையாக உருவாக்கும் சக்தி இருக்கிறது. அந்த சக்தியை எழுப்புவதற்குச் செய்யும் முயற்சிதான் இந்த ஆழ்நிலை தியானம். இதைப் பழகுவதென்பது ஒரு சுகமான அனுபவம்!

1 Comments:

At Sat Oct 08, 10:30:00 PM 2005, Anonymous Anonymous said...

உங்கள் 'விவேகம்'வலைப்பூ நன்றாக இருக்கிறது.

அன்புடன்,
பழனி முருகையா,
USM,Pg.

 

Post a Comment

<< Home