எழுத்தறிவித்தவன்...
நல்ல ஆசிரியர் என்பவர் மாணவர்களின் அறிவுக் கண்களைக் மட்டும் திறக்காமல் அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பினையும் மனித நேயத்தையும் புகட்டுபவராவார். இது பழங்காலத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டிய மகத்தான பொறுபுடையவர் ஆசிரியர்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்: "ஆசிரியர்கள் தெய்வப் பிறவிகளாக இருத்தல் அவசியம். நல்லொழுக்கம், நற்பண்புகள், மனித நேயம், மாணவர்கள் பால் அன்பு ஆகியவற்றைக் கொண்ட தொயாக சீலராக இருக்க வேண்டும்." அத்தகைய ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளவற்ற பக்தியும் மரியாதையும் கொண்டு ஒழுகுவர்.
- நன்றி : அம்புலிமாமா, செப்.2005
மேற்குறிப்பிட்ட கட்டுரையை வாசிக்கும் போது பல எண்ணங்கள் எழுத்தன. இன்றைய நவ நவீன உலகில் ஆசிரியர்கள் பணி பல்வேறு திறன் மேம்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. மேலெழுந்த வாரியாக ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்பிபார்களானால் - மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை மட்டும் பெறக்கூடும். அது முழுமையான கல்வியாகாது. ஆசிரியர் தம் மாணாக்கர் மீது தூய்மையான அன்பு பாராட்ட வேண்டும்; நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்; மாணவர்களின் பண்பு நலனில் அதிக அக்கரைக் காட்ட வேண்டும்; உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்!
தம் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நடுநிலைமையை வழியுறுத்தி மாணவர்களுக்கு சத்தியத்தின் தீர்க்க தரிசனத்தை உணரச்செய்தல் வேண்டும். சுற்றுச் சூழல் பாதகமாக இருப்பினும், மாணவர்களின் அறிவு, சிந்தனையைத் தட்டியெழுப்பி இதயத்தின் அடிநாதத்தில் நல்லெண்ணங்களைப் பதனப்படுத்தும் சூட்சுமத்தைக் கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு நல்லதையே எக்காரியத்திலும் செய்யத் தூண்டுதல் வேண்டும். பிறருக்கு எந்த வகையிலாவது நல்லதைச் செய்து விட வேண்டும் என்ற எண்ணமானது, இயல்பாகவே மாணவர்களிடையே 'மனித நேயத்தை' வளர்க்கும்.
2 Comments:
நீங்கள் சொல்வது மிக்கச் சரி வாசுதேவன்
தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி,
குமரன்.
Post a Comment
<< Home