இயற்கை நம் தோழன்!
கொஞ்சம் மேலே பாருங்களேன்......எத்தனை அற்புதங்கள் நிறைந்துள்ளன எல்லையில்லா இப்பிரபஞ்சத்தில்!
எல்லையற்ற வானம்......பிரபஞ்சம்......மௌனப் பரவெளி! அந்த மௌனப் பரவெளியில், அணுக்கூட்டங்களின் சங்கமம் + ஆட்டம் நடக்கின்றது.
இரவில் எத்தனை விண்மீன்கள் மின்னுகின்றன! அத்தனையும் நம் பிரபஞ்சப் பரவெளியில் நடக்கும் அதிசயங்கள்! உணர்ந்து பார்க்காதவரை அவை வெறும் நட்சத்திரங்களே! சாதாரணமாக அவற்றை நாம் கண்டுக்கொள்வதில்லை!
அடடா....காலையில் நாம் பார்க்கும் சூரியன் அவற்றுள் ஒன்று. சூரியக் கூட்டுக்குடும்பத்தில் நாம் வாழும் பூமி எப்படிப்பட்ட அதிசயம் என்று யோசித்ததுண்டா..?
இந்த அற்புதமான வான் சூழ்ந்த தோற்றத்தில் பால்வீதி மண்டலத்தைத் தாண்டி
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஓய்ந்தபாடில்லை!
இயற்கைக் காட்சி மாறுகிறது.
மேலே வெண்மதி நிலவு வீசுகிறது.
கீழே எல்லையற்ற கடல் அலை வீசிக் குதிக்கிறது. கதிரவன் கதிர்கள் உலகைச் சித்தரிக்கின்றன; கடலிலிருந்து ஆவியை மேலே இழுத்து, மேகங்களை நெய்கின்றன; மேலிருந்து மழை பொழிகிறது. மண்ணுலகம் பசும் பொலிவெய்துகிறது; மக்கள் வயல் தோட்டங்களில் உழைத்துப் பிழைக்கின்றனர். பயிர்களை உண்டு உயிர்கள் பிழைக்கின்றன!
இயற்கை நண்பன் காட்சி மாறுகிறான்.
பொன்னிலங்காலை புலர்கிறது. விண்மீன்களின் பவனி மறைகிறது.
'கோ கோ! - சேவல்! கா கா - காக்கை! ( கோ - கடவுளே; கா - காப்பாய்)
கு கூ - குயில்; கி கீ - கிளி; ஆ ஆ -வானம்பாடி; சிக் சிக் - குருவிகள்.....இவ்வாறு புட்களின் பஜனை நடக்கிறது.
உதய சூரியன் சுடர் வீசி எழுந்து கதிர் வீசி நம்முன் நிற்கிறது.
அருட்பெருஞ்சோதி கண்டதுண்டா ?
இயற்கையை நண்பனாக நினைத்து ஒவ்வொரு நாளையும் வரவேற்றதுண்டா? இறைவன் இயற்கையாய்... தோழனாய்.... உதவிட காத்திருக்கிறான்.......கொஞ்சம் கண்டுக்கொள்ளுங்களேன்!
9 Comments:
ஹலோ மிஸ்டர் வாசு,
உங்கள் வலைத்தளத்திற்கு வருகை புரிந்து நீண்ட நாட்களாகிவிட்டன. இன்றுதான் பார்த்தேன். வெகு அருமை. அருமையான சிந்தனை. அனைவரும் இயற்கையைத் தோழனாகக் கருதவேண்டும். ஒருசிலர் மட்டும் குரல் எழுப்பினால் போதாது.
ராணி ( அழகுராணி, சிங்கப்பூர் )
சகோதரி அழகுராணிக்கு வந்தனம்.
எமது வலைப்பூவுக்குள் நுழைந்து அழகாய் கருத்துரைத்து (தங்கள் பெயரை போல்) மனதார வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
மெய்யாகவே... அடியேன் கொஞ்ச காலம் வலைப்பதிவிலிருந்து ஒதுங்கி இருந்தேன். மீண்டும் பிரவேசிக்க முயற்சி எடுக்கிறேன்.
தங்கள் ஆதரவு தொடர வேண்டுமாய் அன்புடன் விழைகிறேன்!
விவேகமுடன்,
எல்.ஏ.வி
//இயற்கையை நண்பனாக நினைத்து ஒவ்வொரு நாளையும் வரவேற்றதுண்டா? இறைவன் இயற்கையாய்... தோழனாய்.... உதவிட காத்திருக்கிறான்.......கொஞ்சம் கண்டுக்கொள்ளுங்களேன்!//
a good thought abt nature. but iyarkkai iyarkkaiyaahavey irukkatume. yetharkaaha iraivanaaha vendum. iyarkkayai appadiye rasipathilum suham irukkaththaan seihirathu. iraivan yendra karpanaip paathiram irunthaalum illavittaalum athai iyarkaiyaaha rasikka mudiyum. enjoying and observing nature as it is could be equally joyous even without an "Intelligent designer"
வணக்கம் நண்பரே,
நலமா? நலம் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் வலத்தளம் அர்ப்புதம். காலத்திற்கு ஏற்ற முயற்சி.
வாழ்க, வளர்க...
நன்றி,
என்றும் அன்புடன்,
உங்கள் கல்லூரி நண்பன்,
ச. ஜெய குமார்,
ஈப்போ, பேராக்.
இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாசகங்கள் இவை!
நன்றி
அருண்
வணக்கம்.....வணக்கம்!
கல்லூரி நண்பர் ஜெய குமாரா? நான் இங்கு நலம். எப்படியய்யா இருக்கிறீர்?
வருக! வருக! மிக்க மகிழ்ச்சி அன்பரே!
1994 ஜூன் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முடித்ததிலிருந்து எப்படியிருந்தாலும் சுமார் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வலைப்பதிவின் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இயற்கையின் விளையாட்டை எண்ணி வியக்கிறேன்!
என்னைத் தொடர் கொள்ளவும்:
( vasudev_70@hotmail.com )
019-7628517
கல்லூரி நினைவலைகளுடன்,
எல்.ஏ.வாசுதேவன்.
வணக்கம் வாசுதேவன்,
நல்லப் பதிவு ஆனால் இப்படிலாம் நிலா, வானம் , நீரோடை என்று பேசிகொண்டு இருந்த மக்கல் விலகி செல்கிறார்கள் என்பதை நான் கண்டுக்கொண்டேன், ஆனால் நீங்கள் மனவுறுதி மிக்கவர் போலும்.
இப்படித்தான் நேற்று ஸ்டெல்லார் கான்ஸ்டெல்லேஷன் ,64 நட்சத்திரக் கூட்டம் இந்தியர்கள் வைத்த பேரும் , கிரேக்கர்கள் வைத்த பேரும் ஒரே போல் உள்ளது என்று ஒருவரிடம் ஆரம்பித்தேன் அவ்வளவு தான் எனக்கு ஒரு வேலை இருக்கிறது அப்பறம் வறேன் என்று ஓடி ஓடி விட்டார்.
என்ன கொடுமை சார் இது!
"வவ்வால்" நண்பரே!
மறுமொழி இட்டதற்கு மனமார்ந்த நன்றி!
என்ன செய்வது, சிறுவயதில் அம்புலிமாமா கதையில் வரும் விக்ரமாதித்தன் அடிக்கடி அரைத் தூக்கத்தில் ( அடியேன் )இருக்கும்போது முறைத்துச் செல்கிறார்!
அவர் பேரைக் கேட்டாலே
'சும்மா அதிருதுல..!'
அருண்,
தமிழீழத்தின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாசகங்கள் -
இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி
...என்று வாசிக்கையில்
வேலுப்பிள்ளை அவர்களின் 'வாழ்க்கை வரலாறு' இயற்கையின் - பிரபஞ்சப் படுதாவில் புத்திலக்கியமாய் இயற்கையையாலேயே வரையப்படுகின்றது போலும்!
வெற்றி நிச்சயம்!
Post a Comment
<< Home