விவேகச் சிந்தனை
வாழ நினைத்தால் வாழலாம்....!
பார்க்கத் தெரிந்தால் பாதைத் தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலைத் தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்..!
போராடு மனிதா..!
"கீழே விழுந்த நாம் எழுந்திருக்க வேண்டும்.
மறுபடியும் போராட வேண்டும்.
எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து எழுந்து போராட வேண்டும்.
உற்சாகத்துடன் போராட வேண்டும்.
போராட வேண்டியது நமது கடமை.
அது ஒன்றே நாம் செய்வதற்கு உரியது.
பலனை அளிப்பவன் இறைவன்.
நாம் முயற்சி என்னும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள்
இறைவனே பலன் என்னும் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி..!"
0 Comments:
Post a Comment
<< Home