உங்களுக்குள் ஒரு தலைவன்!
வரும் 2007-ம் ஆண்டை வரவேற்க இதோ சில தன்னம்பிக்கையுடன் வாழ வைக்கும் வார்த்தைகள் - வாழ்வியல் சிந்தனை முத்துக்கள்!
- முதலில் நீங்கள் செயல்படத் துவங்குங்கள், அதன் பின்பு அனைத்தும் சரியாகிவுடும்.
- வழக்கத்திற்கு மாறாக சற்று மாறுபட்டு இருப்பதுதான் சாதாரணமானவற்றிற்கும் அசாதாரணமானவற்றிற்கும் உள்ள வித்தியாசம்.
- கற்பனையானது அறிவை விட மிகவும் முக்கியமானது. -[அல்பர்ட் ஐன்ஸ்டின்]
உங்கள் தினசரி நடவடிக்கைகளின் போது கீழ்க்கண்டவைகளைக் கடைபிடியுங்கள்:
- மனோரீதியான எண்ணக்கட்டுப்பாடு: உங்கள் தினசரி செயல்பாடுகளில் இறங்கும் போது எண்ணங்களைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள். உங்கள் உள்மனதில் மற்றும் ஆழ்மனநிலைகளில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதற்கு முன்பு அழித்துவிடுங்கள். அனைத்தையும் குறித்து நேர்மறையான மனோநிலையைப் பராமரியுங்கள்.
- மனோரீதியான பேச்சுக்கட்டுப்பாடு: நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணியுங்கள்.எதிர்மறையான பேச்சுக்களையும், தீய வார்த்தைகளையும் தவிர்த்து விடுங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும், திட நம்பிக்கையுடன் பேசுங்கள்.
- எண்ணங்களை மனக் காட்சியாகப் பார்த்தல்: விருப்ப எண்னங்கள் உங்கள் மனதில் உட்புகும் ஒவ்வொரு நேரமும் உடனடியாக நீங்கள் ஏற்கனவே மனதில் கொண்டிருந்த காட்சிகளை நீங்களாகவே மனக்காட்சியாக காணுங்கள்.
- உடனடி தியானம்:எப்பொழுதெல்லாம் ஓய்வு அல்லது புத்துணர்வு தேவைப்படுகிறதோ அப்பொழுது சற்றுநேரத்தை உடனடியாக தியானப்பயிற்சிக்கு ஒதுக்குங்கள்.
- ஆக்கப்பூர்வமான ஒளிகொண்ட மனக்காட்சி:தியானப்பயிற்சியை மேற்கொண்ட பிறகு ஆக்கப்பூர்வமான மனக்காட்சியைத் தினமும் ஒரு வேளைவ்வது பயிற்சியாக செய்து பழகுங்கள்.
1 Comments:
வாசுதேவன்,
மிக நல்ல, ஒவ்வொரு நாளுக்கும் மற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள்!
//கற்பனையானது அறிவை விட மிகவும் முக்கியமானது// மிகவும் மனதை ஈர்த்த வரிகள்.
நன்றி உங்கள் பதிவுக்கு.
அன்புடன்,
நம்பி.பா.
Post a Comment
<< Home