.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, January 26, 2007

மழை @ வரலாறு காணா வெள்ளம் - ஜொகூரில்!

மழை / / / / / / / / / / / / / / / / / / / / // / / / / // / / / / /
விடாது மழை / / / / / / / / // / / / / / / / / / / / / / / / / / / / / / /
நேற்று மழை! இன்றும் மழை! / / / / / / / / / / / / / / / / / / / / / /
///////////////////////////////////////////////////////////////////////////////////
வானிலை ஆய்வு கழகம்
அறிக்கை விடுத்துள்ளது...
'மூன்றாவது அலை' வர வாய்ப்புள்ளது
என்று.


கடந்த டிசம்பர் மாதத்தில் 'முதல் அலை' ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாயினர் - குறிப்பாக எங்கள் ஜொகூர் மாநிலத்தில் பெருவாரியான இடங்களில் வரலாது காணாத ( கடந்த 100 ஆண்டுகளில் - உண்மையா என்று தெரியவில்லை ! ) வெள்ளம்! 19.12.2006 முதல் ஜொகூரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம். வெள்ள நீர் மட்டம் குறைதாது 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை - சில இடங்களில் (ஒரு தரை வீட்டை மூழ்கடிக்கும் அளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் ! )

சிகாமாட் மாவட்டத்திலுள்ள லாபிஸ், சா'ஆ பட்டணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சிகாமட் பட்டணம் வெள்ளத்தால் போக்குவரத்து முதல் மின்சாரம் வரை அனைத்தும் துண்டிக்கப்பட்டது.

அதனை அடுத்து குளுவாங், பத்து பகாட், ஜொகூர் பாரு மற்றும் கோத்தா திங்கி மாவட்டங்களில் வெள்ள துயர் துடைப்போர் மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐயும் தாண்டியது.

வெள்ளத்தின் கொடூரம் பார்த்திராத பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்! பெரியவர்கள் இம்மாதிரியான அபூர்வ வெள்ளத்தைத் தம் வாழ்நாளில் சந்திப்பது இரண்டாவது முறை என்று கருத்துரைத்தனர்.

கோத்தாதிங்கி பட்டணம் முழுதும் வெள்ளத்தால் மூழ்கியது - முதல் அலையில்.

வெள்ளம் சற்று வடிந்த இரண்டாவது வாரத்தில் ( ஜனவரி, 2007 )மீண்டும் இரண்டாவது அலை - வெள்ளம்! இம்முறை ஜொகூர் மாநிலத்தைத் தவிர்த்து அடுத்த மாநிலங்களான மலாக்கா மற்றும் பகாங் பாதிப்புக்குள்ளாயின.

முதல் கட்ட வெள்ளத்தில் இழப்பீடு முன் அனுமானத்தின் தொகை 100 மில்லியன் என்று கூறப்பட்டது. இரண்டாவது வெள்ளத்தின் காரணமாக இழப்பு / சேதத்தின் தொகை இன்னும் கூடும்.

ஆச்சரியம் என்னவென்றால், டிசம்பர் பிற்பகுதியிலிருந்து வானம் மழை மேகங்களை போர்த்தியிருந்ததால் சூரியனை காணமுடியவில்லை!
பொங்கல் ரிலீசாக புதுப்படங்கள் வருவது போல் ( கோபிக்க வேண்டாம் )
சூரிய பகவான் சரியாக பொங்கலன்று மக்களுக்கு தரிசனம் தந்தார்!

அதன் பிறகு அவ்வப்போது வந்து போய் கண்ணா மூச்சியாட்டம் தான்!

அப்பாட....வெள்ளம் கொஞ்சம் தனிந்து இருக்கின்ற சமயத்தில் மீண்டும்
'மூன்றாவது அலை' வரும் என்ற அறிவிப்பு மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது!

இன்றுவரை பத்து பகாட்டில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கை 40,000 க்கும் மேல்! பிற இடங்களில் வெள்ளம் வடிந்து நிலைமை வழக்க நிலைக்கு வந்துள்ளது.

இன்று எங்கள் இடைநிலைப் பள்ளியில் எழுந்துள்ள கேள்வி:
"நாளை மழை வருமா ?"
நாளை எங்களுக்கு சிறப்பு பள்ளிநாள் ( சீனப் புத்தாண்டு சிறப்பு விடுமுறைக்கு - முன்னதாக மாற்று(ஈடு செய்யும்) பள்ளிநாள் )

மழை தொடர்ந்தால், நாளை ஏற்பாடாகியிருக்கும் அனைத்து மாணவர்களுக்கான புறப்பாட நடவடிக்கைகளில் ஒன்றான 'தடை எதிர்ப்பு ஓட்டம்' ஒத்திவைக்கப்படும்!

வெளியே தூரல் நின்ற பாடில்லை!

0 Comments:

Post a Comment

<< Home