இருப்பதை வைத்துக்கொள்..இல்லாத்தை உபயோகி!
கவிதை:
இருபத்துநாலு கால்கள் கொண்ட
சக்கரம் செய்கிறோம்
உபயோகிப்பதோ நடுவில் உள்ள வெற்றிடத்தை,
களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை,
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ உள்ளே உள்ள வெற்றிடத்தை,
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ அதன் நன்மைகளைப்
பெற்றுக்கொள்.
விளக்கம்:
இல்லாத உலகம் ஒன்று இருக்கிறது. அதைப் புரிந்துகொள்; அதை உபயோகிஎன்கிறார் ஞானி லாட்சு. சுருக்கமாகச் சொன்னால், எண்ணங்களை நாம்பார்க்க முடிவதில்லை.
ஆனால்,அதைத்தான் நாம் உபயோகிக்கிறோம்.இல்லாத உலகம்;பார்க்க முடியாத உலகம். இருபத்துநாலு கால்கள் வைத்துச் சக்கரம் செய்கிறோம். எப்படிச் சக்கரம்உருளுகிறது..? நடுவிலே இருக்கும் வெற்றிடத்தில்தான் அச்சைக் கோக்கிறோம்.அந்த வெற்றிடத்தை உபயோகிக்காவிட்டால் சக்கரம் உருளாது.
களிமண்ணால் ஆன பானை செய்கிறோம்.. எங்கே சோறு பொங்குகிறோம்? பானையின்உள்ளே இருக்கும் வெற்றிடத்தில். டம்ளர் என்ற அமைப்பில் தண்ணீர் குடிக்கிறோம்.. எங்கேதண்ணீர் நிற்கிறது? உள்ளே இருக்கும் வெற்றிடம்தான் நமக்கு உதவுகிறது.
ஜன்னல்களும் கதவுகளும் சுவர்களும் வைத்து வீடு கட்டுகிறோம். எங்கே படுக்கிறோம்?எங்கே விருந்தினர்களை வரவேற்கிறோம் ? எல்லாம் அந்த ஹாலில், சமயலறையில்...அந்த வெற்றிடத்தில்தான்.
குறிப்பு : டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் "வாழ்க்கை வெளிச்சம்" எனும் நூலிலிருந்து.
1 Comments:
கவிதை சிறப்பாக உள்ளது.
பவானி-ஜொகூர்.13.8.2004
Post a Comment
<< Home