.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, June 27, 2004

உள்நோக்கியப் பயணம் !

அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கும் சவால்களுக்கும் ஈடுகொடுக்க ஓடுகிறோம்...வெளிநோக்கியப் பயணத்தில். நவீன வாழ்க்கையின் 'கவர்ச்சி' நம்மை அதிவேகமாக ஓட வைக்கிறது இலக்கை நோக்கி! ஒருவகையில் இவ்வெளிநோக்கியப் பயணத்தில் பழகிவிடுகிறோம். கால வோட்டத்தில் இது ஓர் இயந்திரத் தனமான வாழ்க்கைப் பயணமாகிறது.

காலையில் எழுந்தது முதல், இரவு நித்திரை கொள்ளும் வரை எல்லாமே விரைவு, வேகம், அவசரம் என்னும் சார்புடைய சொற்களில் வாழ்க்கை அடங்கிவிட்டதோ!..என்று எண்ணத் தோன்றுகிறது. அளவுக்கு அதிகமான வெளி விசயங்களில் மூழ்கித் தவிக்கிறோம். சில சமயங்களில் சிக்கல் நிறைந்தவர்களின் உள்ளம் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகிறது; அதன் விளைவாக உடலும் தளர்ச்சியடைகிறது.

இதற்கு தீர்வு ஏதும் உண்டா ? என்று நெஞ்சம் விம்முகிறது; அழாமல் அழுகிறது. எங்கிருந்து வெளிநோக்கியப் பயணத்தைத் தொடர்ந்தோமோ -- அங்கிருந்தே தீர்வு காணும் மார்க்கத்தை
சரியானப் பாதையைக் காண்பிக்கிறது 'மனம்' ஆன்மீகப் பயணமாக.....உள்நோக்கியப் பயணத்தில்.

மெய்யுணர்வுக்கு வழிகாட்டுவதுதான் உள்நோக்கியப் பயணம். நல்வாழ்வுக்குச் சுடர் விளக்காய் வெளிச்சத்தை ஊட்டுவதுதான் உள்நோக்கியப் பயணம். வாழ்வின் சூட்சுமத்தை விளங்கச் செய்வதற்கே இந்த உள்நோக்கியப் பயணம்.

மனச் சாந்தி - நிம்மதி இதில்தான் 'வாழ்வின்' உண்மை அர்த்தம் பொதிந்துள்ளது. இலக்கு - இலட்சியம் முக்கியம்தான். ஆனால் போகின்ற பாதை சுமை குறைந்ததாகவும் அன்றாட நிகழ்வுகள் சுவை நிறைந்ததாகவும் அல்லவா இருக்க வேண்டும்.

பி.கு : பழைய பாடல் .........பயணம், பயணம் , பயணம் ...என்று ஆரம்பிக்குமே ( ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! எனப் புதிய மெட்டை நீங்கள் அசைபோடுவது கேட்கிறது ) " புகைவண்டி ஓட்டிட ஒருவன், அது போகின்ற வழி சொல்ல ஒருவன். அந்த இருவரை நம்பிய மனிதன் , அவன் இடையினில் இருப்பவன் இறைவன். இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே... எவரை எவர் வெல்லுவாரோ ?

1 Comments:

At Mon Jul 11, 06:03:00 AM 2005, Blogger Unknown said...

//மனச் சாந்தி - நிம்மதி இதில்தான் 'வாழ்வின்' உண்மை அர்த்தம் பொதிந்துள்ளது. இலக்கு - இலட்சியம் முக்கியம்தான். ஆனால் போகின்ற பாதை சுமை குறைந்ததாகவும் அன்றாட நிகழ்வுகள் சுவை நிறைந்ததாகவும் அல்லவா இருக்க வேண்டும்//.

மன சாந்தி எந்த இலக்குமில்லாமல் இருந்தாலன்றோ வரும்?., எப்போது இலக்கு என்ற ஒன்றை நோக்கிப் பய்ணிக்கிறோமோ., அப்போதே மனச் சாந்தி விடைபெறுகிறது.

 

Post a Comment

<< Home