ஒரு புகழ்பெற்ற பிரார்த்தனை
இறைவா!
என்னை உன் அமைதியின் கருவியாக்கு.
எங்கே வெறுப்பு தோன்றுகிறதோ அங்கே அன்பை விதைப்பேன்.
எங்கே மனப்புண் ஏற்பட்டிருக்கின்றதோ அங்கே மன்னிப்பை விதைப்பேன்.
சந்தேகம் உள்ள போது நம்பிக்கையை.
சஞ்சலம் தோன்றுமிடத்து நல்ல காலம் வருவதை.
இருள் சூழுமிடத்து ஒளியை.
துயரத்தில் மகிழ்வின் விதைகளை.
ஓ! என் தெவத் தலைவனே!
ஆறுதல்படுத்தப் படுவதைவிட ஆறுதல் அளிக்கும் பணிக்கு என்னை ஆளாக்கு.
பிறர் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக பிறரைப் புரிந்து கொள்ள வழி காட்டு.
அன்பு செலுத்த வேண்டும் பிறர் என்று அவாவுவதைவிடப் பிறருக்கு அன்பு செலுத்தும் பணியில் ஆளாக்கு.
ஏனெனில்,
கொடுப்பதில்தான் பெறுகிறேன்.
மன்னிக்கும்போதுதான் மன்னிக்கப்ப்டுகிறேன்.
சாவதில்தான் அமரத்தன்மை பெறுகிறேன்.
குறிப்பு: இத்தாலி நாட்டில் உள்ள அசிசி என்ற ஊரில் பிறந்த செயிண்ட் பிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை. நன்றி- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி - 'மனம், பிரார்த்தனை, மந்திரம்' எனும் நூலிலிருந்து.
1 Comments:
//ஆறுதல்படுத்தப் படுவதைவிட ஆறுதல் அளிக்கும் பணிக்கு என்னை ஆளாக்கு.
பிறர் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக பிறரைப் புரிந்து கொள்ள வழி காட்டு.//
நான் செய்ய வேண்டிய பிராத்தனை., நன்றி
Post a Comment
<< Home