மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை !
தற்போது நாட்டில் 526 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 77 சதவிகித தமிழ்ப்பள்ளிகள் பகுதி மானியம் பெறுபவையாகும். அதாவது 120 பள்ளிகள் மட்டுமே அரசாங்கத்தின் முழு மானியம் பெறுகின்றன. இதர 406 தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலங்களில் இருப்பதன் ஒரே காரணத்தால் இவை அடிப்படை வசதி குறைந்த நிலையில் இருக்கின்றன. இப்பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதும், அவ்வப்போது அரசியல் தலைவர்களும், தலைமையாசிரியர் மன்றங்களும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் பூலாவ் லங்காவியில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கப் பேராளர் கூட்டத்திலும் இப்பிரச்னை விவாதிக்கப்பட்டு சங்கத்தின் கோரிக்கையாக அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை விரைவில் ஏற்கப்பட வேண்டும் என்பதே இந்திய சமூகத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.
இன்னமும் அவை தனியார் நிலங்களில் இருக்கின்றன என்று கல்வி அமைச்சு சாக்குப்போக்குச் சொல்லி தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளான தரமான கட்டடம் மற்றும் மேசை, நாற்காலிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதில் என்ன நியாயமிருக்கிறது ?
3 Comments:
எங்கிருந்தாலும் தமிழ்ப் பள்ளிகள் சாபம் பெற்றவைதானோ?
sir inta nadu nambolada illa.namba ennata solla...irukura talaivanunggalum sariyilla namakulla otumayum illa...so arasanggata solli enna payan....???unggalamari nalu peru natuku tevai.UNGGALATU SEVAI INDIA SAMUTAYATUKU TEVAI..VALGA VASU DEVAN...HARAPAN GUYS...
அன்பு 'ஹரப்பான்' தம்பிகளுக்கு வணக்கம்.
இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை வகுத்தவர்களில் நம்மினத்தின் பங்கு அதிகம். 'வரலாறு' பகரும் தகவல்கள் காலவோட்டத்தில் மறக்கப்பட்டாலும் சிலர் வேண்டுமென்றே வரலாற்றின் சான்றுகளை மறைத்து எழுதினாலும் 'உண்மை' அதர்மத்தால் மழுங்கடிக்கப்பட்டாலும் அது ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றொரு நாள் வெளிப்பட்டே ஆகும். எனவே, நம் நாடுதான் இது.புலம் பெயர்ந்த நம் மூதாதையர்கள் பிழக்கத்தான் வந்தார்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு. நாட்டுப் பற்றோடு வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் நம்மவர்கள்! நேர்மையுடனும் விசுவாசத்துடன் ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட்டவர்கள். ( அடுத்தத் தேர்தலில் நம்முடைய ஓட்டு சிதருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதைக் கணிக்க முடிகிறது!)அரசாங்கத்திடம் நம்முடைய நியாயமான உரிமையைத்தான் கேட்கிறோம். தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் நிலைத்து இருந்தால்தான் -- தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் யாவும் கட்டிக்காக்க முடியும்! நம் சந்ததியினர் அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மைச் சபிக்காமல், திட்டாமல் இருக்கவாவது போராட வேண்டியுள்ளது. உரிமைப் போராட்டம் தொடரும்!
விவேகமுடன்,
எல்.ஏ.வாசுதேவன்.
Post a Comment
<< Home