.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, August 11, 2004

திறம்படக் கற்றல் (Mastery Learning)

திறம்படக் கற்றல் என்பது கல்வித் துறையில் பல காலங்களாக வழங்கிவருகின்ற ஒரு முறைதான். திறம்படக் கற்றல் ( Mastery Learning ) என்பதுகற்பித்தலைப் பற்றிய ஒரு கோட்பாடு - Mastery learning is a philosophy abaout teaching. தகுந்த முறையில் அதே நேரத்தில் ஏற்புடைய சரியான வழிகளைப்பின்பற்றி கற்பித்தால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர் போதிக்கும் பாடங்களைமுழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இக்கொள்கையின் முதன்மையானகூற்றாகும்.

திறம்படக் கற்றலின் வெற்றி மாணவர்கள் எந்த அளவுக்குக் கற்றலில் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதிலும், எந்த அளவுக்குத் தேவையான பொழுது' கற்றல் சிக்கலை எதிர்நோக்குகின்ற காலத்தில்' பிரச்னைகளைக் களைய உதவப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகின்றது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

திறம்படக் கற்றலில் ஆசிரியரின் கற்பித்தல் அணுகுமுறை, பேச்சுமுறை, கட்டளை முறை,விளக்கும் பாங்கு, கற்பிக்கும் பாங்கு, கற்றலில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்கும் உதவி, திறம்படக் கற்றலுக்குத்தேவையான கால அவகாசம், ஆசிரியரின் தெளிவான கற்பித்தல் நோக்கம்,கற்பித்தல் விளைவு முறை( feed back ) குறைநீக்கல் முறை( corrective procedures )போன்றவை மாணவர்களின் அடைவுநிலை வேறுபாட்டிற்கு முக்கியக் காரணங்களாகவிளங்குகின்றன. இவற்றுள் உன்னதமான கற்றல் நடைபெற " கற்பித்தல் விளைவு அறிதல்"( feed back ), குறைநீக்கல் முறையும் ( corrective procedures ) முக்கியப் பங்குவகிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் திறம்படக் கற்றல் முறையைப் பற்றிச் செய்யப்பட்டஆய்வுகளிலிருந்து தெள்ளெனத் தெரிவது யாதெனில்,ஒரு பள்ளியில் நல்லகற்றல் சூழல் இருந்தால், கற்றலில் தனிமனித வேறுபாடு அர்த்தமற்றதாகிறது அதாவது பூஜ்யத்தை நோக்கிச் செல்கின்றது என்றும், பொருத்தமில்லாத சூழலில் அதிகப் பெரும்பான்மையான வேறுபாடு தோன்றுகின்றது என்பதுமே ஆகும்.

குறிப்பு:
தமிழ்ப்பள்ளிகளில் திறம்படக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பலஆண்டுகள் ஆகின்றன என்பது ஒருபுறமிருக்க, தகுந்த கற்றல் சூழல் அமைந்திருக்கின்றதா? என்பதே தலையாயக் கேள்வி.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாமே!

1 Comments:

At Wed Aug 11, 02:37:00 PM 2004, Anonymous Anonymous said...

வணக்கம். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை எமது வலைப்பூவில் இணக்கப்பட்ட "யுனிகோர்ட் எழுத்துரு மாற்றி" (Tamil Link) வழி மறுமொழியாக்கலாம்.

அன்புடன், வாசுதேவன் இலட்சுமணன்

 

Post a Comment

<< Home