.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, January 29, 2005

பிரார்த்தனை !

  1. மக்களுக்கு நலம் உண்டாகுக. ஆள்பவர்கள் இந்த பூமியை நியாயமான மார்க்கத்தில் ஆளட்டும். சான்றோர்களுக்கு எப்பொழுதும் சுபம் உண்டாகட்டும். அனைத்து உயிர்களுக்கும் சுகமாக இருக்கட்டும்.
  2. மேகங்கங்கள் காலம் தவறாமல் மழை பொழிய வேண்டும். பூமியானது அதிக தான்யங்களை அளிக்க வேண்டும். இந்த தேசமானது குழப்பங்கள் இன்றி இருக்க வேண்டும். சான்றோர்கள் பயமின்றி வாழ வேண்டும்.
  3. அனைவரும் சுகமாக இருக்கட்டும். அனைவரும் நோயற்று ஆரோக்கியமாக இருக்கட்டும். அனைவரும் நன்மையையே காணட்டும். எவருமே துக்கத்தை அடையாமல் இருக்கட்டும்.
  4. அநித்தியத்திலிருந்து என்னை ( ஞானத்தின் மூலம் ) நித்யத்திற்கு அழத்துச் செல்வாயாக. அறியாமை எனும் இருட்டிலிருந்து என்னை ஞானமெனும் ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக. பந்தமெனும் மரணத்திலிருந்து என்னை மோட்சமெனும் அழியா நிலைக்கு அழைத்துச் செல்வாயாக.
  5. தோன்றுவதற்கு முன்பும் ப்ரஹ்மம் பூரணமாக இருந்தது. இவ்வுளகம் தோன்றியபின்னரும் அது பூரணமாக உள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை நீக்கினாலும் அது எப்பொழுதும் பூர்ணமாகவே உள்ளது. ஆதலால் அனைத்தும் பூர்ணமே.
  6. இறைவா, இந்த ஆன்மீக மார்க்கத்தில் என்னிடமிருந்தே தோன்றக்கூடியதும், பிற உயிர்களின் மூலம் வரக்கூடியதும், இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படக்கூடியதுமான இடையூறுகளிலிருந்து எனக்கு சாந்தி உண்டாகட்டும்.

( தமிழாக்கம் - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி )

1 Comments:

At Sat Jan 29, 10:46:00 PM 2005, Blogger Vasudevan Letchumanan said...

"இறைவா! இதை என்னால் செய்ய முடியுமல்லவா?" எனும் சிறிய புத்தகம் - 14 பக்கங்கள்.( இரண்டாம் பதிப்பு: 2004 )அச்சிட்டோர்: ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 014.

இவை ஸ்வஸ்தி வசனத்தை ஒட்டிய தியானமும் பிரார்த்தனையும் - ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்களின் உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்வாமி ப்ரஹ்மலீனாநந்தா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.மிக எளிய தமிழ் நடையில் அனைவரும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.

தைப்பூசத்தன்று பினாங்கில் வாங்கினேன்.

 

Post a Comment

<< Home