தகவல் தொழில் நுட்பப் பயிலரங்கு
ஜோகூர் மாநில இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்களுக்கான தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கு இன்று , ஆகஸ்ட் திங்கள் 8-ஆம் நாள் முதல் 11-ஆம் நாள் வரை, மலாக்காவிலுள்ள ஸ்திரேட் மெரீடியன் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் / பயிலரங்கில் மாநிலத்திலுள்ள 90 தமிழாசிரியர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள் என்று மாநில கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு துணை அதிகாரி திரு. விஜயன் இராமசாமி தெரிவித்தார்.
தகவல் தொழில் நுட்பத்தை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தும் முறைமை,
பயிற்றுத் துணைக் கருவிகள் இவற்றோடு கற்பித்தலில் புதிய யுக்திகளையும் அடையாளம் காணும் கருத்தரங்காக அமையும் என்று நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமாகிய திரு.விஜயன் இராமசாமி கூறினார்.
பி.கு: இப்பயிலரங்கில் 'தமிழ் கற்றல் கற்பித்தலில் பல்லூடகத் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு' - (7-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை) மற்றும் 'தகவல் தொழில் நுட்பத்தில் வலைப்பூவும் மின்தமிழும்' எனும் இரண்டு கட்டுரைகள் அடியேன் வழங்க விருக்கின்றேன்.
4 Comments:
நண்பர்களே...
கருத்தரங்கில் ஏற்பட்ட அனுபவத்தை இங்கு பதிக்கலாமே...!
அன்புடன்,
எல்.ஏ.வி
ஹூம்!விசா தேவைபடாவிட்டால் வந்துவிட்டு போகலாம்.
போனவங்க வந்து எழுதுங்க,தெரிஞ்சுக்கிறோம்.
இந்த கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.கற்றல்
கற்பித்தலில் பயன்படுத்துவதற்கு ஏற்புடையது!இதன் வழி
மாணவர்களின் கவனத்தை எளிதாகக் கவரமுடியும்.
நன்றி,
பொ.யுவராஜன்,
S.M.K.Chaah, Johor.
தமிழாசிரியர்கள் இணைய பயன்பாடு பற்றி ஆழமாக தெரிந்திருக்க வேண்டும்.இப்பயிலரங்கின் வழி தமிழ் பாடத்தைத் பல்லூடகம் வழி எவ்வாறு சிறப்பாக நடத்த முடியும் என்பதை அறிந்து கொண்டேன்.
சந்தர் பாலகிருஷ்ணன்,
SMK Indahpura 1,
Kulai, Johor.
Post a Comment
<< Home