.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, September 02, 2004

உளவியல், பயிற்றியல் துறைகளில் புதிய செல்நெறிகள் -2

கருத்தாக்க முறை

கருத்தாக்கம் என்பது மக்கள் எவ்வாறு கற்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு கொட்பாடாகும். மக்கள் சுயமாகவே உலகைப் புரிந்து கொள்கிறார்கள். உலகைப் பற்றிய அறிவைப் பெறுகிறார்கள். இவ்வாறு செய்வதற்கு அவர்களுடைய முன்னறிவும் முன் அனுபவமும் பெரும் பங்காற்றுகின்றன. ஒவ்வொருவருடைய அறிவாற்றல் பெருக்கத்திற்கும் அவரே காரணமாக அமைகிறார்.

வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பயிற்று முறைகளே கருத்தாக்க கற்றல் நடைபெற உதவுகின்றன. பரிசோதனை முறை, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முறை முதலிய அணுகு முறைகள் மாணவர்கள் ஒன்றைப் பற்றி அதிக அறிவு பெறுவதற்கு வழி வகுக்கின்றன.
குறிப்பு : பகுதி 2
கட்டுரையாளர்:இணைபேராசிரியர் முனைவர்என்.எஸ்.இராஜேந்திரன்Ph.D,
சுல்தான்இட்ரிஸ்கல்விப்பல்லைக்கழகம்.

0 Comments:

Post a Comment

<< Home