.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, November 12, 2005

செறிவான தலைமத்துவம் - தலைமையாசிரியர்களுக்கு!



மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களே...கனிந்த வணக்கம்.

செறிவான தலைமைத்துவத்தின் அடிப்படை பள்ளியின் மேம்பாடாகும். ஆசிரியர் திறனை வலுப்படுத்துதல், பாடத்திட்டத்தை முறைப்படுத்துதல், பள்ளி நிர்வாக அமைப்பை சீர்படுத்துதல், பெற்றோரின் ஈடுபாடு மற்றும் சமூகத்தினரின் பங்கேற்பு போன்றவை செறிவான தலைமைத்துவத்தின் நான்கு முக்கியக் கூறுகளாகும்.

பள்ளியில் செறிவான தலைமைத்துவத்தை வழங்கும் முதன்மையான தனிநபர் தலைமையாசிரியர்தான். ஒவ்வொரு பள்ளியிலும் ஆதரவான பள்ளி பண்பாட்டையும், சுற்றுச் சூழலையும் உருவாக்குவதில் தலைமையாசிரியர்கள்தான் மற்றவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ வேண்டும்!அவ்வாறு சில தமிழ்ப்பள்ளிகளில் சில தலைமையாசிரியர்கள் திகழ்கிறார்கள்.அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.

அன்பார்ந்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களே....இன்றைய பல்லூடகத் தகவல் தொழில் நுட்பத்தை பள்ளிகளில் புழங்கச் செய்ய என்னென்ன ஆக்ககர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை தயவு கூர்ந்து எழுதுங்கள்.

எனதருமை சக வலைப்பதிவாளர்களே...நீங்களும் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!

0 Comments:

Post a Comment

<< Home