.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, December 10, 2005

கணினி வழி மொழி கற்பித்தல்

இக்கால மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே இருந்த இடத்திலிருந்தே கல்வி கற்கும் யுகத்தில் வாழ்கிறார்கள். வானொலி,தொலைகாட்சி,கணினி, இணையம் மற்றும் அவை சார்ந்த மென்பொருள் முதலியன பெருகிவிட்டன. பயிற்றுக்கருவிகளும் பல்கி விட்டன.நவீன தொழில் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு அற்புதமான வழி அமைத்து விட்டன என்றால் மிகையாகாது.

பலபயன் கருவியாக விளங்கும் ஒரு சாதனத்தைத் தமிழ் கற்பித்தலுக்கும் பயன்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும்! கணினியில் பாடங்களையும் பயிற்சிகளையும் தயாரித்து மாணவக்களிடம் கொடுக்கும்போது, அதை அவர்களே செய்து பழக வாய்ப்பு இருக்கிறது.மாணவக்களின் தேவைக்கு ஏற்பப் பயிற்சிகள் அமையும்போது மாணவர்கள் மிகுந்த நன்மையைப் பெறுவர்.இதை ஆசிரியர் தனியொருவராகச் செய்ய வசதி இல்லை என்றால், ஒரு சிலர் சேர்ந்து செய்யலாம்.பள்ளி நிர்வாகம் இத்தகைய தன்னார்வ ஆசிரியர்களை ஊக்குவித்தால் பல நன்மைகள் அடைய வழி வகுக்கும்.

இப்போது வர்த்தக ரீதியில் கணினி மென்பொருளில் நிறையத் தமிழ்ப் பயிற்சிகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.எழுத்துக்களின் உருவும் ஒலியும் ஒரு சேரத் தோன்றும் பயிற்சிகளும் இப்போது வர ஆரம்பித்துவிட்டன. இது தமிழுக்கு ஒரு விடிவுகாலம் எனலாம்.

தமிழாசிரியர்களும் பிறமொழி ஆசிரியர்களைப் போல கணினியை இயக்கத் தெரிந்தவர்களாகவும் அதில் தமிழ்ப் பயிற்சியளிக்க அறிந்தவராகவும் இருந்தால், மாணவர்கள் தமிழ் கற்பதில் பெருமை கொள்வர்.தமிழாசிரியர்களைப் பற்றிய மதிப்பீடும் உயரும்.இதனால், தமிழ் கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமை ஊடுருவி, புத்தம் புதிய நீரோட்டமும் ஏற்படும். இதனால், மலேசியத் தமிழாசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் பல்லூடகத் தகவல் தொழில் நுட்பப் பயன்பாடு சற்று பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்ற கருத்தைத் திருத்தி எழுத வாய்ப்பு ஏற்படும்.

மலேசியத் தமிப்பள்ளிகளின் மொழி ஆசிரியர்கள் விவேகம் கொள்வார்களா..?

3 Comments:

At Sun Nov 04, 02:18:00 PM 2007, Blogger Teluk Merbau said...

தொடர்க உங்கள் தமிழ்ப்பணி

சி.ம.இளந்தமிழ்

 
At Sun Nov 04, 02:18:00 PM 2007, Blogger Teluk Merbau said...

தொடர்க உங்கள் தமிழ்ப்பணி

சி.ம.இளந்தமிழ்

 
At Sun Nov 04, 02:21:00 PM 2007, Blogger Teluk Merbau said...

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி

 

Post a Comment

<< Home