தமிழ்ப் பள்ளிகளுக்குப் பொற்காலம்!
மலேசியத் திருநாட்டில், கடந்த ஜனவரி, 3-ஆம் நாள் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். அன்று, 2006 -ஆம் ஆண்டின் பள்ளி துவக்க நாள். நாடு முழுவது அன்று பள்ளிகள் திறக்கப்பட்ட வேளையில், முதலாம் ஆண்டில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்!
ஆரம்பமே அமோகம்! இன்ப அதிர்ச்சியில் தமிழ்ப்பள்ளிகள்!
இந்தப் புத்தாண்டில் கெடா, பேரா, ஜொகூர், நெகிரி செம்பிலான், கூட்டரசுப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருப்பதாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் பிரதான அமைப்பாளர் திரு.வி.விக்ரமசூரியா விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளில் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஏற்கனவே பயிலும் 90 ஆயிரம் மாணவர்களோடு மேலும் 10 ஆயிரம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். 2006-இல், மேலும் 17 ஆயிரம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் சேர்ந்திருப்பதன் வழி, தமிழ்ப்பள்ளிகளில் மானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் அனேகப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பதிந்து கொண்டிருப்பதால், இவ்வாரக் கடைசியில் 17 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை அமைப்பாளர் திரு.வி.விக்ரம சூரியா கூறியுள்ளார்.
இந்த எதிர்ப்பாராத பன்மடங்காக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பினும், முதன்மையாகக் கருதப்படுவது கடந்த ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் ( 6-ஆம் ஆண்டு அடைவு நிலை தேர்வு ) தேர்ச்சி முடிவுளும் அடங்கும்.
"கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீது காட்டும் ஆர்வமும், சமூகம் தமிழ்ப்பள்ளிகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதிகரித்து வருகின்றது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றக் கூடியவர்கள். பிள்ளைகளின் கல்வித்தரம் தமிழ்ப்பள்ளிகளில் உயர்வு கண்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகிதம் சான்று பகர்கின்றது" என ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.கே.நடராஜா கருத்துரைத்துள்ளார்.
அதோடுமட்டுமல்லாமல் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் இப்பொழுது பாலர் பள்ளிகளும் இயங்கி வருவதால் நேரடியாக ஆண்டு 1-இல் சேர்க்கப்படுகின்றனர்.
மேலும், அண்மைய காலத்தில் இந்தியர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள், பொது நல சமூக அமைப்புக்கள், அரசு சார்பற்ற கல்வி, கலை கலாச்சார அமைப்புகளும் எடுத்துக் கொண்ட அக்கறையும் விழிப்பும் நல்ல பலன் கொடுத்திருக்கின்றது எனலாம்.
அடிப்படையில் பெற்றோரிடையே சிந்தனை மாற்றமும் விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதன் வழி 'தமிழ்மொழி' கற்பதோடு தமிழ்ப் பண்பாடு, கலை கலாச்சாரத்தோடு சேர்ந்து வளரும் தமிழ் மாணவர்கள் - சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உள்ள மாணவர்களாக உருவாகிறார்கள் என்பதை அனுபவ ரீதியில் பெற்றோர் உணரத் தொடங்கி விட்டனர் என்றால் அது மிகையாகாது.
முதலாம் வகுப்பில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்துள்ளாதால் சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வகுப்பறைப் பற்றாக்குறையைச் சமாளிக்கச் சில தலைமையாசிரியர்கள் புதிய அணுகுமுறையைக் கையாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை மாலைப் பள்ளியில் கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ்ப்பள்ளிகளில் இடப் பற்றாக்குறை பிர்ச்னைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சு உடனடியாக உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். தமிழ்ச் சமுதாயமும் எதிர்பார்க்கிறது!
9 Comments:
ஒரு மொழியின் வளர்ச்சி என்ற அள்வில் வரவேற்கப்பட வேண்டிய விசயம். செய்தியை இட்டதற்கு நன்றி.
good news.
thanks
மறுமொழி இட்ட அன்பர் திரு.கார்த்திக் அவர்களுக்கு நன்றி.
அன்பர் தனரா!? அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Good & happy news. thanks Mr.Vasu
அன்பார்ந்த வாசகர்களே!
மறுமொழி இடும் போது (Anonymous ) தாங்கள் யார் என்று குறிப்பிடாவிட்டாலும்
எந்த நாட்டிலிருந்து கருத்து தெரிவிக்கிறீர்கள் என்று எழுதவும்!
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.
நல்ல செய்தி. நன்றி.
எங்கும் நிறைந்த தமிழ் , எங்கள் தமிழ் ,எப்பொழுதும் வெல்லும் வெல்லும்.
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..
Post a Comment
<< Home