.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, January 17, 2006

நேர்மை இல்லாதவன் பிளவுபட்ட மனிதன்!


எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? நேர்மை இல்லாதபோது நாம் பிளவு பட்டவராகிறோம்.We become split personalities.நம் மதிப்பீடுகள் போல், எண்ணம் போல், சொல் இல்லாதபோது எண்ணுபவருக்கும்,பேசுபவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.எண்ணம் போல் செயல் இல்லாதபோது எண்ணுபவருக்கும், செயல்படுபவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.அம்மாதிரியே சொல்வது போல் செயல்படாவிட்டால் பேசுபவருக்கும் செயல்படுபவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது.இப்படி நம்மிடம் பிளவுகள் ஏற்படும்போது மனம் அமைதி இழக்கிறது. நம் மனதில் குற்ற உணர்வுகளும் சுய வெறுப்பும் உண்டாகின்றன. நம்மை நாமே நம்ப முடியாமல் போகிறது.

இம்மாதிரியான மனம் எந்தவிதமான கல்வியைப் பெறுவதற்கும் தகுதியானதல்ல. எதை சாதிப்பதற்கும் தகுந்ததல்ல!


குறிப்பு:
நன்றி, 'தர்மத்தின் மதிப்புதான் என்ன?'- ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி.

2 Comments:

At Tue Jan 17, 10:58:00 PM 2006, Blogger ஞானவெட்டியான் said...

அருமையான சொற்றொடர்.
அளித்தமைக்கு நன்றி.

 
At Wed Jan 18, 02:22:00 AM 2006, Blogger Vasudevan Letchumanan said...

ஞானவெட்டியான் ஐயா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்! உங்கள் ஞான வேள்வி தொடரட்டும்.

அன்புடன்,
இல.வாசுதேவன்

 

Post a Comment

<< Home