ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் மன்றத் தலைவர் :
திரு. N.தமிழ்வாணன் ( SMK Skudai, Johor.)
"இம்மாதிரியான கருத்தரங்கின் வழி பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுகிறது. முதல் நிகழ்வாக தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் எவ்வாறு கற்றல் கற்பித்தலை இன்னும் சிறப்பாக நடத்தலாம் என்பதைப் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால், இதுவரை தகவல் தொழில் நுட்பத்தைத் தங்கள் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தாத ஆசிரியர்கள்கூட மிகுந்த ஆர்வத்தோடு காணப்படிகின்றனர்.
அடுத்த நிகழ்வாக, மாணவர்கள் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சியடைய வழிவகை செய்ய பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதன்வழி ஆசிரியர்கள் மேலும் தங்கள் மாணவர்களின் அடைவு நிலையை உயர்த்த முயற்சி எடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு, ஆசிரியர்கள் ஒரு குடும்ப சூழலில் தமது ஆசிரியர் பணி தொடர்பான பல்வேறு உத்திகளையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள இக்கருத்தரங்கு ஒரு களம் அமைத்துக் கொடுத்ததென்றே கூறவேண்டும்.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ய எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொண்ட ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் செயற்குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
2 Comments:
தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழாசிரியர்களின் அறிவு சற்று குறைவாகவே இருக்கிறது. இக்கருத்தரங்கு / பயிலரங்கின் வழி இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் நல்ல பயனடைந்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் தாங்களாகவே தகவல் தொழில் நுட்பப் பயிலரங்கில் கலந்து தொழில் நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திரு.ஞா.வேதநாயகம்.
SMK Indah Pura,
Kulai,Johor.
நல்ல ஒரு நிகழ்வு, தொடர்நது நடைபெற வாழ்த்துக்கள்!
திரு.கு.குணசேகரன்,
சா'ஆ
(பெக்கோ இடைநிலை பள்ளி)
Post a Comment
<< Home