.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, August 31, 2006

உன்னால்தான் மலேசியா - 49வது தேசிய தினம்



49ஆம் ஆண்டு சுதந்திர நாள் நிறைவு விழா கொண்டாட்டக் காலக் கட்டத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ந்திருக்கும் வேளையில் நாடு அடைந்துள்ள வளர்ச்சியினைக் கண்டு நாம் பெருமிதப்படுவது உண்மை.

மலேசியா பல்லின மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக விளங்கும் அரிய நாடு.

"என்ன வளம் இல்லை, இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்," என்ற பாடல் வரிகள் கூறுவது போல எல்லா வகை வளங்களும் நிறைந்த நாடுதான் நம் மலேசியா.

தேசிய தினச் சிறப்புச் செய்தியில் " நாட்டின் வலிமைக்கு எல்லோரும் இணைவீர்!" என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு நலம்பெறவும், மேலும் வலிமை பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி நேற்று நாட்டு மக்களுக்கு விடுத்த தேசிய தினச் செய்தியில் வலியுறுத்தினார்.

சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவை என்றார் பிரதமர்.

உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும், அரசியல் நிலைத்தன்மையும், பல்லின மக்களின் ஒற்றுமையும், சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

இந்த வேளையில் நாட்டின் தேசிய கோட்பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.

1) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
2) பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
3) அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
4) சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
5) நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

மலேசியர் என பெருமை கொள்வோம்!
உன்னால்தான் மலேசியா!

0 Comments:

Post a Comment

<< Home