.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, May 29, 2007

மனம் - ஜீவரேடியோ ?

யூரிகெல்லர் என்ற இஸ்ரெல்காரர் ஒரு சமயம் தமது மன எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஓர் உலோகத்துண்டை வளைத்துக் காட்டினார்.

எண்ணங்கள் நமது உடலை மாத்திரம் பாதிப்பதில்லை; பிற உயிர்களைப் பாதிக்கும், ஊடுருவும்; ஏன், உயிரற்ற திடப் பொருள்களைக்கூட ஆட்டிப்படைக்கும் வலிமை படைத்தவை அவை.

எனவே, நாம் நல்ல எண்ணங்களைப் பரவவிடுவது நல்லது.

உண்மையில் நம் மனம் ஒரு ஜீவ ரேடியோ போன்றது! அதிலிருந்து உற்சாகத்தையும், தைரியத்தையும், மகிழ்ச்சியும் பரப்பலாம் - அதன் வழி நாம் மகிழ்வுடன் இருக்கலாம் அல்லது நமது வானொலி மூலம் அழுகுரலை, துக்கத்தை, இயலாமையைப் பரப்பிக் கொண்டிருக்கலாம்.
இதன் மூலம் நொந்து, பிறரையும் நோகச் செய்யலாம்.

நாட்டில் ஓரிரு அழுகுரல் தலைவர்கள் இருந்தால் போதும்; எல்லாவற்றிலும் குற்றம் கண்டு வாழ்வையே நரகமாக அடித்துவிட முடியும்.

( டாக்டர் எம்.எஸ்.உ அவர்ளின் 'எண்ணங்கள்' புத்தகத்திலிருந்து )