இயற்கை நம் தோழன்!

கொஞ்சம் மேலே பாருங்களேன்......எத்தனை அற்புதங்கள் நிறைந்துள்ளன எல்லையில்லா இப்பிரபஞ்சத்தில்!
எல்லையற்ற வானம்......பிரபஞ்சம்......மௌனப் பரவெளி! அந்த மௌனப் பரவெளியில், அணுக்கூட்டங்களின் சங்கமம் + ஆட்டம் நடக்கின்றது.
இரவில் எத்தனை விண்மீன்கள் மின்னுகின்றன! அத்தனையும் நம் பிரபஞ்சப் பரவெளியில் நடக்கும் அதிசயங்கள்! உணர்ந்து பார்க்காதவரை அவை வெறும் நட்சத்திரங்களே! சாதாரணமாக அவற்றை நாம் கண்டுக்கொள்வதில்லை!
அடடா....காலையில் நாம் பார்க்கும் சூரியன் அவற்றுள் ஒன்று. சூரியக் கூட்டுக்குடும்பத்தில் நாம் வாழும் பூமி எப்படிப்பட்ட அதிசயம் என்று யோசித்ததுண்டா..?
இந்த அற்புதமான வான் சூழ்ந்த தோற்றத்தில் பால்வீதி மண்டலத்தைத் தாண்டி
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஓய்ந்தபாடில்லை!
இயற்கைக் காட்சி மாறுகிறது.
மேலே வெண்மதி நிலவு வீசுகிறது.
கீழே எல்லையற்ற கடல் அலை வீசிக் குதிக்கிறது. கதிரவன் கதிர்கள் உலகைச் சித்தரிக்கின்றன; கடலிலிருந்து ஆவியை மேலே இழுத்து, மேகங்களை நெய்கின்றன; மேலிருந்து மழை பொழிகிறது. மண்ணுலகம் பசும் பொலிவெய்துகிறது; மக்கள் வயல் தோட்டங்களில் உழைத்துப் பிழைக்கின்றனர். பயிர்களை உண்டு உயிர்கள் பிழைக்கின்றன!
இயற்கை நண்பன் காட்சி மாறுகிறான்.
பொன்னிலங்காலை புலர்கிறது. விண்மீன்களின் பவனி மறைகிறது.
'கோ கோ! - சேவல்! கா கா - காக்கை! ( கோ - கடவுளே; கா - காப்பாய்)
கு கூ - குயில்; கி கீ - கிளி; ஆ ஆ -வானம்பாடி; சிக் சிக் - குருவிகள்.....இவ்வாறு புட்களின் பஜனை நடக்கிறது.
உதய சூரியன் சுடர் வீசி எழுந்து கதிர் வீசி நம்முன் நிற்கிறது.
அருட்பெருஞ்சோதி கண்டதுண்டா ?
இயற்கையை நண்பனாக நினைத்து ஒவ்வொரு நாளையும் வரவேற்றதுண்டா? இறைவன் இயற்கையாய்... தோழனாய்.... உதவிட காத்திருக்கிறான்.......கொஞ்சம் கண்டுக்கொள்ளுங்களேன்!