மலர் பேசும் மொழி!
பூவைப் பார்க்கின்றேன் - ஆனால்
பூ தெரியவில்லை.
மகிழ்வு பரப்பும் மனத்தை
நினைவின் இனிமையில் நுகர்கின்றேன்.
பூவே, நீ வெறும் தாளல்ல
தாளினால் வரையப்பட்ட நிழற்படமல்ல.
இருபரிமாணட்டு நீள அகலமல்ல.
நான்காம் பரிமாணத்து நறுமணம்.
காயாகாமல் கனியாகாமல்
மலர்ப் பருவத்துடன் வாழ்வை முடிக்கும்
மணம்தரு மலரே
நீ தியாகத்தின் சின்னம்!
அழகின் உச்சத்தில் மலராகி
ஆன்மாவில் பரப்பும் ஆனந்தம். நீ.
மலர்பேசும் மொழிதான் என்ன?
உன்னைக்கொடு, உலகை உயர்த்து.
அன்பால், தொண்டால் ஜீவனை மலர்த்து!