.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, February 23, 2007

எண்ணங்களே....வண்ணங்களாய்..!

சும்மா... கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பழக்கப்பட்டவர்களை உங்கள் மனத்திரையில் கொண்டுவர முடியுமா ? முடிந்தால் மேலே படியுங்கள்; மனோவண்ணங்களைக் கண்டுபிடியுங்கள்!

மனத்திதையில் பிரதிபலிக்கும் வண்ணங்களின் தன்மைகளைக் கொண்டு ஒருவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியுமாம்!

அதற்கு முன், வண்ணங்கள் என்ன எண்ணங்களைக் குறிக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.......இதோ வண்ணங்களின் தன்மைகள்:

  1. சிவப்பு: தெளிவாக சிவப்பு ஒளி பிரகாசித்தால் நல்ல ஆரோக்கியத்தையும் அதிகமான ஆழமான பாலுணர்வையும் குறிக்கும். மங்கலான சிவப்பு வண்ணம் கோபம்-வெறுப்பு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் - வஞ்சத் தன்மைகளைக் குறிக்கும்.
  2. ஆரஞ்சு: தெளிவாகவும் பிரகாசமாகவும் ஆரஞ்சு வண்ணம் தெரிந்தால் இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாகவும் மனவுறுதி படைத்தவர்களாகவும் இருப்பார்கள். மதிப்பு- மரியாதை ஆகிய பண்புகள் இவர்களிடம் இருக்கும். மங்கலான ஆரஞ்சு வண்ணம் - நம்பகமில்லாத தன்மைகளையும் மதிக்காத குணம் - தூக்கியெறிந்து பேசும் தன்மை மற்றும் அதிக விபரம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
  3. மஞ்சள்: பிரகாசமான மஞ்சள் வண்ணம் நல்ல உடல்வாகு - கவர்ச்சி - மதிப்பு - மரியாதை ஆகிய குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றும் பலரையும் உபசரித்து மகிழ்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். மங்கலான மஞ்சள் ஒளியுள்ளவர்கள் நம்ப முடியாது.நயவஞ்சகத் தன்மை உள்ளவர்கள். இவர்கள் செயல்களும் பதட்டம் அவசரத் தன்மை இருக்கும்.
  4. பச்சை: நல்ல தெளிவான பச்சை வண்ணம் பிரகாசமாக இருந்தால் அது நேர்மை , நியாயம், அன்பு, பாசம் ஆகியவைகளைக் குறிக்கும். இவர்கள் உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். நமது வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவி செய்வார்கள். மங்கலான பச்சை வண்ணம் - போட்டி, பொறாமைக் குணங்களைக் குறிக்கும்.
  5. நீலம்:நல்ல பிரகாசமான நீல வண்ணம் உங்களுக்கு அமைதியையும் அன்பையும் தரக்கூடியது. கிரியாசக்திகள் நன்கு செயல்படுவதை இந்த பிரகாசமான நீல ஒளி குறிப்பிடுகிறது. இவர்கள் நல்லதையே செய்வார்கள். பிறருக்கு உதவி செய்வார்கள். மங்கலான நீல ஒளி சாதாரணமானவர்களாகத்தான் இருப்பார்கள்.
  6. இண்டிகோ - கருநீலம்: இந்த வண்ணம் சூட்சும சக்திகளின் ஆற்றல்களை வெளிக்காட்டுகிறது. தெளிவான கருநீலம் உள்ளவர்கள் சூட்சும சக்திகளை இயக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். உன்னத யோக நிலையை அடைந்தவர்கள். இவர்கள் ஞானிகள் யோக சித்திகள் அடைந்தவர்களாகவே அமைதியுடனும் ஆனந்தத்துடனும் அன்பு ஒளியை பரவச் செய்து கொண்டும் இருப்பார்கள்.
  7. வயலட் - ஊதா: நல்ல தெளிவான ஒளி பிரகாசத்துடன் வயலட் வண்ணம் ( ஊதா / கத்தரிப்பூ) தெளிவாக இருப்பதால் இவர்கள் மகான்கள்தான். எல்லாம் அறிந்தவர்களாக இருப்பார்கள். வயலட் - தங்க வண்ணம் - பச்சை போன்ற வண்ணங்களையும் பிரகாசிப்பவர்கள். மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆன்மீக குருமார்களாகவும் ஆற்றல் மிகுந்து திகழ்வார்கள்.

Wednesday, February 21, 2007

எண்ணங்கள்தான் காரணம் -விவேகம்



நாம் இன்றைக்கு எப்படி இருக்கிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பு. அதாவது நம்முடைய எண்ணங்கள்தான் பொறுப்பு. நம்முடைய எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. நம்முடைய இன்றைய நடவடிக்கைகளுக்கு நேற்றைய சிந்தனைகளே காரணமாகின்றன.


ஆக ஒரு சமுதாயத்தின் எழுச்சியோ வீழ்ச்சியோ மனிதர்களின் நடத்தையினாலும் நடவடிக்கைகளையும் பொறுத்துத்தான் அமைகிறது. மனிதர்களின் நடத்தைக்கும் நடவடிக்கைகளுக்கும் அவர்களின் எண்ணங்களே காரணமாக அமைவதால் சமூகங்களின் நாகரிகங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் எண்ணங்களே காரணமாகின்றன.


- விவேகச் சிந்தனை.

யாரோ சொன்னது.....- விவேகம்

என்றும் வானம்
நீலமாகவே இருக்குமென்றோ
வாழ்க்கைப் பாதை நிறைய
பூக்களே பூத்திருக்கும் என்றோ
கடவுள் வாக்களிக்கவில்லை.

மழையில்லாத வெயிலோ
கவலையில்லாத மகிழ்ச்சியோ
வேதனையற்ற சமாதானமோ
உண்டாகும் என்றும்
கடவுள் வாக்களிக்கவில்லை.

ஆனால்
கடவுள் உறுதியளித்தது:
ஒருநாளுக்கான சக்தியை
உழப்பிற்கான ஓய்வை
பாதையை ஒளியை!

- நன்றி, அக்னிச் சிறகுகள்.

Tuesday, February 20, 2007

கல்வியின் பயன் யாது?


கல்வி வேறு.படிப்பு வேறு.புத்தகத்தில் இருக்கும் விசயங்களை மண்டையில் தேக்கிக் கொள்வது படிப்பு. அது கல்வியாகாது!


புத்தியை எப்போதும் இதயத்திடம் பாடம் படித்து அடங்கி நடக்கச் செய்வதுதான் உண்மையான கல்வி.


வித்தையுடன் விநயசம்பத்தும் வெகு அவசியம்!


புத்தி இயதயத்துக்குப் பணியும் போதுதான் இதயத்தே உள்ள அகவொளி புலனாகும். அதுவே ஆண்டவன். அதை அறிவதே கல்வியின் பயனாகும்.


- யாரோ ஒரு மகான்.

வார்த்தையை மாற்றுங்கள், வாழ்க்கை மாற்ம்!






"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தாம் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தாம் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தாம் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தாம் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!"

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி