.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, August 16, 2004

மாசய் - தமிழ்ப்பள்ளியில் 'வலைப்பூ' அமைக்கும் பயிலரங்கு

இடம் : மாசாய் தமிழ்ப்பள்ளி
நாள்: 13.08.2004
நிகழ்வு :தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் வலைப்பூ அமைக்கும் வழிகாட்டிக் கருத்தரங்கு.
ஏற்பாடு : தெமெங்கொங் இபுறாஹீம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ( MPTI ) - விரிவுரையாளர்கள்.
( i) திருமிகு. சேதுபதி (ii) திருமிகு. சண்முகம் (iii) திருமிகு. ஜேசுடாஸ்
கனிந்த வணக்கம். முதலில், ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் - கல்லூரி விரிவுரையாளர் திருமிகு. சேதுபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய முயற்சியால் எமக்கு இப்பயிலரங்கை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தது. 'தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் வலைப்பூவும் மின் தமிழும்' எனும் தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது. இது முதல் முயற்சி; சிறியஅளவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜொகூர் வட்டாரத்தைச் சார்ந்த 26தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்;பயனடைந்தார்கள்.
அவர்களுக்கு தமிழில்'யூனிகோட்' முறையில் எளிய வழியில் weblog -வலைப்பூ அமைப்பது பற்றி பயிலரங்கு நடைபெற்றது.
கலந்து கொண்ட ஆசிரியர்கள் செய்முறை பயிற்சியிலும் ஈடுபட்டனர்; பலர் வெற்றிகரமாக முதல் தமிழ் வலைப்பதிவு செய்தனர்.
நல்லதொரு துவக்கம். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இதன்வழி தங்களை தகவல் தொழில் நுட்பத் துறையில் இன்னும் ஈடுபாடு காட்ட ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகின்றேன்.
அன்புடன்,
எல்.ஏ. வாசுதேவன்,
பல்லூடகத் தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்.
பி.கு : கலந்து பயனடைந்த ஆசிரியர்கள் தங்கள் வலைப்பூவை எவ்வாறு கற்றல் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பணி தொடர்பான சிந்தனைக்களமாக்குவது பற்றி ஆழ்ந்து யோசிக்குமாறு அன்புடன் விழைகின்றேன்.

Wednesday, August 11, 2004

திறம்படக் கற்றல் (Mastery Learning)

திறம்படக் கற்றல் என்பது கல்வித் துறையில் பல காலங்களாக வழங்கிவருகின்ற ஒரு முறைதான். திறம்படக் கற்றல் ( Mastery Learning ) என்பதுகற்பித்தலைப் பற்றிய ஒரு கோட்பாடு - Mastery learning is a philosophy abaout teaching. தகுந்த முறையில் அதே நேரத்தில் ஏற்புடைய சரியான வழிகளைப்பின்பற்றி கற்பித்தால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர் போதிக்கும் பாடங்களைமுழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இக்கொள்கையின் முதன்மையானகூற்றாகும்.

திறம்படக் கற்றலின் வெற்றி மாணவர்கள் எந்த அளவுக்குக் கற்றலில் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதிலும், எந்த அளவுக்குத் தேவையான பொழுது' கற்றல் சிக்கலை எதிர்நோக்குகின்ற காலத்தில்' பிரச்னைகளைக் களைய உதவப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகின்றது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

திறம்படக் கற்றலில் ஆசிரியரின் கற்பித்தல் அணுகுமுறை, பேச்சுமுறை, கட்டளை முறை,விளக்கும் பாங்கு, கற்பிக்கும் பாங்கு, கற்றலில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்கும் உதவி, திறம்படக் கற்றலுக்குத்தேவையான கால அவகாசம், ஆசிரியரின் தெளிவான கற்பித்தல் நோக்கம்,கற்பித்தல் விளைவு முறை( feed back ) குறைநீக்கல் முறை( corrective procedures )போன்றவை மாணவர்களின் அடைவுநிலை வேறுபாட்டிற்கு முக்கியக் காரணங்களாகவிளங்குகின்றன. இவற்றுள் உன்னதமான கற்றல் நடைபெற " கற்பித்தல் விளைவு அறிதல்"( feed back ), குறைநீக்கல் முறையும் ( corrective procedures ) முக்கியப் பங்குவகிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் திறம்படக் கற்றல் முறையைப் பற்றிச் செய்யப்பட்டஆய்வுகளிலிருந்து தெள்ளெனத் தெரிவது யாதெனில்,ஒரு பள்ளியில் நல்லகற்றல் சூழல் இருந்தால், கற்றலில் தனிமனித வேறுபாடு அர்த்தமற்றதாகிறது அதாவது பூஜ்யத்தை நோக்கிச் செல்கின்றது என்றும், பொருத்தமில்லாத சூழலில் அதிகப் பெரும்பான்மையான வேறுபாடு தோன்றுகின்றது என்பதுமே ஆகும்.

குறிப்பு:
தமிழ்ப்பள்ளிகளில் திறம்படக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பலஆண்டுகள் ஆகின்றன என்பது ஒருபுறமிருக்க, தகுந்த கற்றல் சூழல் அமைந்திருக்கின்றதா? என்பதே தலையாயக் கேள்வி.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாமே!

இருப்பதை வைத்துக்கொள்..இல்லாத்தை உபயோகி!

கவிதை:

இருபத்துநாலு கால்கள் கொண்ட
சக்கரம் செய்கிறோம்
உபயோகிப்பதோ நடுவில் உள்ள வெற்றிடத்தை,
களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை,

கதவுகளும் ஜன்னல்களும் வைத்து வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ உள்ளே உள்ள வெற்றிடத்தை,

எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ அதன் நன்மைகளைப்
பெற்றுக்கொள்.

விளக்கம்:
இல்லாத உலகம் ஒன்று இருக்கிறது. அதைப் புரிந்துகொள்; அதை உபயோகிஎன்கிறார் ஞானி லாட்சு. சுருக்கமாகச் சொன்னால், எண்ணங்களை நாம்பார்க்க முடிவதில்லை.
ஆனால்,அதைத்தான் நாம் உபயோகிக்கிறோம்.இல்லாத உலகம்;பார்க்க முடியாத உலகம். இருபத்துநாலு கால்கள் வைத்துச் சக்கரம் செய்கிறோம். எப்படிச் சக்கரம்உருளுகிறது..? நடுவிலே இருக்கும் வெற்றிடத்தில்தான் அச்சைக் கோக்கிறோம்.அந்த வெற்றிடத்தை உபயோகிக்காவிட்டால் சக்கரம் உருளாது.
களிமண்ணால் ஆன பானை செய்கிறோம்.. எங்கே சோறு பொங்குகிறோம்? பானையின்உள்ளே இருக்கும் வெற்றிடத்தில். டம்ளர் என்ற அமைப்பில் தண்ணீர் குடிக்கிறோம்.. எங்கேதண்ணீர் நிற்கிறது? உள்ளே இருக்கும் வெற்றிடம்தான் நமக்கு உதவுகிறது.

ஜன்னல்களும் கதவுகளும் சுவர்களும் வைத்து வீடு கட்டுகிறோம். எங்கே படுக்கிறோம்?எங்கே விருந்தினர்களை வரவேற்கிறோம் ? எல்லாம் அந்த ஹாலில், சமயலறையில்...அந்த வெற்றிடத்தில்தான்.

குறிப்பு : டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் "வாழ்க்கை வெளிச்சம்" எனும் நூலிலிருந்து.