.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, August 22, 2005

ஆழ்நிலைத் தியானம்


இன்று உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தியான முறைகள் கற்றுத் தரப்படுகின்றன. அவற்றுள் முக்கியமாக மூன்று வகைகளைக் குறிப்பிடலாம்:
1) மனதை ஒருமுகப் படுத்தும் ( Concentration ) தியானம்;
2) மனதைக் குவியச் செய்யும் ( Contemplation ) தியானம்;
3) மனதை ஆழ்நிலைப் படுத்தும் ( Transdental ) தியானம்.
இதில் ஆழ்நிலைத் தியானத்தைப் பொறுத்தவரை பழக்க வழக்கங்கள் எதையுமே மாற்றிக் கொள்ளத் தேவைவில்லை .( அடடே இதைத் தானோ இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தோம் என்கிறீர்களா...)எந்த வாழ்க்கை முறையில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை மாற்றாமல் இந்த தியானத்தைச் செய்யலாம்.

ஆழ்நிலைத் தியானம் செய்து, மனதை ஒருமுகப் படுத்தி, சிந்தை தெளிவு பெறுகிறது. அப்போது தன்னலம், அகங்காரம், பேராசை, காமம், கோபம் ஆகிய கீழான குணங்கள் நம்மைவிட்டு அகல்கின்றன. இவற்றிற்கு நேர் எதிரான நற்குணங்களைப் பழகும் போது மனதில் நிரந்தர அமைதி தோன்றுகிறது.

தியானம் செய்வதென்பது எங்கோ காட்டில் சென்று உட்கார்ந்து விடுவதல்ல. மனிதனை அழுத்தும் குறைபாடுகளை நீக்கிக்கொள்ள ஒரு மகானாலோ, முனிவராலோ தான் முடியும் என்பதல்ல. சாதாரண மனிதனாலும் முடியும். சாதாரண மனிதனுக்கு உள்ளேயும் அவனை ஓர் ஒப்பற்ற மேதையாக உருவாக்கும் சக்தி இருக்கிறது. அந்த சக்தியை எழுப்புவதற்குச் செய்யும் முயற்சிதான் இந்த ஆழ்நிலை தியானம். இதைப் பழகுவதென்பது ஒரு சுகமான அனுபவம்!

Saturday, August 20, 2005

காலம் எனும் கோலம்காலங்களே தருகின்றன
அவையே பறிக்கின்றன

காலங்களே சிரிக்கச் செய்கின்றன - பிறகு
அழவும் வைக்கின்றன..

நாம் அனைவரும் - காலச்சக்கரத்தின்
மையத்தில்
வாழ்விலும் மறைவிலும்!

பி.கு: இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்...." சில நேரம் சில பொழுது....சோதனை வரும் பொழுது..
நம்பிக்கையாய்...நம்பிக்கையாய்...
வானில் உன் பெயரெழுது..!

Sunday, August 14, 2005

USM பட்டமளிப்பு விழாவில்....(2)இவர் தவசீலன் த/பெ சுப்ரமணியம். ஜொகூர் மாநிலத்திலுள்ள குளுவாங் வட்டாரத்தைச் சார்ந்தவர். இவர் தமது 3 ஆண்டு கல்வியை ( Ilmu Kemanusiaan ) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். தமது இந்த வெற்றிக்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் இருந்தவர்கள் பெற்றோர்கள் தான் என்கிறார்.மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் தம்முடன் எல்லா தருணத்திலும் உடனிருந்து ஒத்துழைத்த 'ஹரப்பான்' (HARAPAN) - விடுதி நண்பர்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார். 2-வது படத்தில் தவசீலனுக்குப் பக்கத்தில் நண்பர்கள் முறையே :முத்து மற்றும் அலேக்ஸ் - பட்டமளிப்பு அங்கியில் மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கின்றனர். உடனிருப்பவர்கள் Harapan - விடுதி ஜூனியர்கள்.

Saturday, August 13, 2005

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா
1.இவர் திரு முத்துச்செல்வன் த/பெ தண்ணீர்மலை. கோலாகங்சார் இவர் பூர்வீகம். சிறப்புக்குறிய விசயம்..இவர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர். ஆசிரியர் துறையில் 12 ஆண்டு கால அனுபவம் உண்டு. இன்னொரு முக்கியமான தகவல் யாதெனில், 1994-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை அடியேன் இவருடன் இணைந்து ஜொகூர், கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியிருக்கின்றேன். அந்த இனிய நினைவுகளுடன் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டேன்.
திரு.த.முத்துச்செல்வன் கடந்த வியாழன் அன்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில்(USM) PJJ ( தொலை தூரக்கல்வி ) வழி மனித வளத்துறையில் ( Ilmu Kemanusiaan ) 4 ஆண்டு கல்வியை வெற்றிகரமாக முடித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். தம் தாயார் திருமதி சாலாட்சி நடேசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வேளையில், மறைந்த தம் தந்தையாரின் ஆசீர்வாதம் தான் தமக்கு உத்வேகம் அளித்தது என்றார். மேலும் தம் குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். அடுத்து தாம் முதுகலைப் படிப்பைத் தொடரப் போவதாக உறுதியுடன் கூறினார்.

பி.கு : பழகுவதற்கு இனியவரானவர் திரு.முத்துச்செல்வன்.இவர் மாணவர்களுக்குப் போதிக்கும் கலையை சற்றே எட்டி நின்று பார்த்து வியந்திருக்கின்றேன். மாணவர் நலன் கருதி போதனையை நடத்தியவர்; நல்லாசிரியர்.உழைப்பு நிச்சயம் ஒரு நாள் உயர்வைத் தரும் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!


2. இவர் வளர்ந்து வரும் ஆசிரியை. தற்போது தற்காலிக ஆசிரியையாகப் பணி புரிவதாகத் தெரிவித்தார் குமாரி மீனாட்சியம்மாள் த/பெ நடராஜன். இவர் கூலிம், கெடா மாநிலத்தைச் சார்ந்தவர். ஆரம்பக்கல்வியை லாடாங் பாகான் செனா, தமிழ்ப்பள்ளியில் கற்றார். எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியையாக வருவதே இவர் இலட்சியம் என்கிறார். இவரும் USM-இல் 4 ஆண்டு கல்வியாக Ilmu Kemanusiaan - மனிதவளத் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தமது வெற்றிக்கு முழு காரண கர்த்தாவாக இருப்பவர் தமது அம்மா தான் என்று கூறுகிறார். கடின உழைப்பு, சுய முயற்சி, அம்மாவின் ஆசி மற்றும் சமுதாயப் பற்றே தம்மை இவ்வளவு தூரம் உயர்த்தியுள்ளது என்று கூறுகிறார் குமாரி மீனாட்சியம்மாள்.

Wednesday, August 10, 2005

பிரார்தனைஎன்னுள்ளே உறையும் இறைவனே! உன்பால்
வரிசையாய்க் கேட்பது வலிமைசேர் உடலும்,
தவயோகத்தில் தானமர்ந் திடலும்,
ஆக்க வழியிலே அனைத்தையும் எண்ணவும்,
ஆக்க முறையிலே அனைத்தையும் செய்யவும்,
உறுதியும் தெளிவும் உதவுக - உறுதியாய்!

இறைவா!

நீயெனக் கருளும் நிறை வரம் மூன்றாம்
ஐயா, நீ! எனக்கு உதவுக நிதியம்,
அறந்தன்னைக் காத்திடும் திறமும் அருளுக,
தவநெறி மேன்மையும், தானருளிடுக;
மக்கள் ஆட்சி மலர்ந்திடும் சமூகம்
பொதுநல உடைமை போற்றும் சமூகம்
எனப் பொய்யாய்ப் பலர் சாற்றும் இன்றைய உலகு
ஆன்மக் கனிவும் ஆன்மிகப் பொலிவும்
சார்ந்திடும் சால்புடைச் சமூகமாய் மலரவும்
தவயோகத்தில் தானமர்ந் திடற்கும்
ஆக்கச் சிந்தனை அதன்வழிப் பிறக்கவும்
அருளுக இறைவா! அருளுக இறைவா!

இவ்வகை மூன்று இனிய வரங்களை
ஐயனே - மெய்யுள் ஒளியனே அருள்கவே!"

- தவயோகி C.K.சிவராமகிருஷ்ணன்.